இராஜபாளையத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராஜபாளையத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ராஜுக்கள் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை மோசமாக சித்தரித்து பேசினார்.
அதனால் தமிழக முழுவதும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இராஜபாளையத்தில் இன்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு கருப்பு கொடி காட்ட ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிகழ்ந்தது.