Homeசெய்திகள்தமிழ்நாடு"எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?"- விரிவான தகவல்!

“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!

-

 

"எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?"- விரிவான தகவல்!

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர், மேம்பட்ட உற்பத்திக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!

டாடா நிறுவனம்:

கிருஷ்ணகிரியில் உள்ள தனது மின் ஆலையை ரூபாய் 12,082 கோடியில் விரிவாக்கம் செய்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவன உற்பத்தி ஆலை விரிவாக்கத்தை மூலம் 40,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!

ஹூண்டாய் நிறுவனம்:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ரூபாய் 6,180 கோடியில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய, மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை ஹூண்டாய் நிறுவுகிறது.

கோத்ரேஜ் நிறுவனம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூபாய் 515 கோடியில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோத்ரேஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பெகட்ரான் நிறுவனம்:

பெகட்ரான் நிறுவனத்துடன் ரூபாய் 1,000 கோடிக்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.ரூபாய் 1,000 கோடியில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலை மூலம் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்”- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

வின்ஃபாஸ்ட் நிறுவனம்:

வியட்னாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ஆலை அமைக்கிறது. ரூபாய் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் தொழிற்சாலையை அமைக்கிறது வின்ஃபாஸ்ட். தூத்துக்குடியில் அமையவுள்ள ஆலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார வாகனங்கள் உற்பத்திச் செய்யப்படும். புதிய மின்சார வாகன ஆலை அமைக்கப்படுவதால் சுமார் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

டிவிஎஸ் நிறுவனம்:

டிவிஎஸ் நிறுவனத்துடன் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனம்:

சீன நாட்டு மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூபாய் 200 கோடியில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் மிட்சுஷிபி மோட்டார்ஸ் தனது நிறுவனத்தின் ஆலையை அமைக்கவுள்ளது.

MUST READ