Homeசெய்திகள்தமிழ்நாடுஉண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்

உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்

-

உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்

ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் சாலைமறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் விருத்தாசலத்தில் போராட்டம் நடத்திய 50 பேர் கைதாகியுள்ளனர்.

"தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி"- கே.எஸ்.அழகிரி பேட்டி!
Photo: KS Alagiri

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பின் வாசல் வழியாக ராகுல்காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவதை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது. ராகுல் காந்தி தான் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார். நரேந்திரமோடி உண்மையிலேயே அரசியல்வாதி என்றால் தேர்தலில் ராகுல் காந்தியிடம் மோதுங்கள், குஜராத் மண்ணில் எந்த நீதியையும் ராகுல்காந்தி எதிர்பார்க்கவில்லை. உச்சநீதிமன்றத்தில்தான் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

 

MUST READ