திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்புப் பகுதிக்கு சென்ற திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பகுதிக்கு வருகிறீர்கள். மேலும், எரிவாயு குடோனை மூட வேண்டும்; சேதமான பாலத்தைப் புனரமைக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அப்போது, அங்கிருந்த்வர்களை சமாதானப்படுத்திய திருநாவுக்கரசர், குறைகளைச் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சரிடம் கூறுங்கள் (அல்லது) தன்னிடம் மனுவாக அளியுங்கள் என்று தெரிவித்தார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் ஜோ பைடன்!
எம்.பி. உடன் பொதுமக்கள் வாக்குவாதம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.