Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறை விவகாரம்: சித்தராமையா, ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக நேரில் அழைப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம்: சித்தராமையா, ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக நேரில் அழைப்பு!

-

- Advertisement -

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிப்பதற்கான தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தங்களுடைய தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னையில் வரும் 22ஆம் தேதி தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக வனத்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கி, தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதேபோல், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் பல்லா சீனிவாசராவை நேரில் சந்தித்து, தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார்.

MUST READ