Homeசெய்திகள்தமிழ்நாடுBEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

BEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத்திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் ஐந்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று ரயில் பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூபாய் 3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.BEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு உற்பத்தி வழங்கள் சோதனை ஆணையிடுதல் பணியாளர்களுக்கான பயிற்சி மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களையும் வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்தத்திற்கு முதல் மெட்ரோ ரயில் 2026 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும் அதன் பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

சென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு – யாருக்கு? வெளியான பட்டியல்!

 

MUST READ