இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதுடன், செயல்பாட்டு நடைமுறைகளில் எளிதாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று (அக்.27) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்திய துறைமுகங்கள் உலகத் தரத்திற்கு முன்னேற பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்திய துறைமுகங்கள் போதிய ஆழம் இல்லாததால் சர்வதேச கப்பல்கள் அருகில் உள்ள வேறு நாடுகளின் துறைமுகங்களை நாடுகின்றன. இது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
பயணிகள் கப்பல், சரக்கு கப்பல்களைக் கட்டுவதில் போட்டிகளைச் சமாளித்து உலகத்தரத்தை நாம் எட்ட வேண்டும். துறைமுகங்கள் செயல்பாடுகளில் உலகில் 20 நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை. உலகில் சிறந்த 50 சரக்குகளை கையாளும் துறைமுகங்களில் இரண்டு மட்டுமே இந்தியாவில் உள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்து முன்னேறுவதற்காக, மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.