- Advertisement -
கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின்மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 400ஐ நெருங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும், தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது. பாதிப்பு அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும். தமிழ்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் உயிர் பறிக்கும் அளவிற்கு வீரியம் கொண்டதல்ல. அதனால் பதற்றப்பட தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா பல்வேறு பெயர்களில் உருமாறி எப்படி வந்தாலும் தமிழக மக்களை முதலமைச்சர் காப்பார். தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் ஒரே நாளில் 1.24 லட்சம் படுக்கைகளை உருவாக்கமுடியும்” என்றார்.