Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

-

கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம்உத்தரவுகல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நீதிபதி கூறும்போது நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்று பார்க்கும் போது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசுத்தரப்பில் அறிக்கை தயாராகி வருவதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் விசாரணையை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நாளை மறு நாளுக்கு ஒத்திவைப்பு

MUST READ