Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்

செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்

-

செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 2 வது முறையாக ஜூலை 26 வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஜூன் 14ம் தேதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் ஜூன் 28ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து, காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி அஜர்படுத்தப்பட்டார், அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 26 ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்

MUST READ