Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!

-

- Advertisement -

 

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!
File Photo

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!

கோவை மாவட்டம், கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23- ஆம் தேதி காரில் குண்டு வெடித்தது. அதில், ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த நபரின் நெருங்கிய நபரான உக்கடம் பகுதியைச் சேர்ந்த இத்ரீஸ் 12ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திட்டமிட்டத் தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் நிலையில், கோவை புலனாய்வு அலுவலகத்தில் இத்ரீஸ் அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!

அவரது செல்போனில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளை விசாரணைக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இத்ரீஸை சென்னைக்கு அழைத்து வரும் காவல்துறையினர், பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

MUST READ