Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!

இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!

-

 

இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – சீமான்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்குகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது – ஈபிஎஸ் கண்டனம்!

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ