சென்னை திருநின்றவூர் அருகே இரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதால் விரைவு ரயில் போக்குவரத்து பாதிப்பு:
சென்னை திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் போடி நாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும் விரைவு இரயில் அரை மணி நேரமாக நிறுத்தப் பட்டது.
சென்னை புறநகர் நெமிலிச்சேரி இரயில் நிலையத்திற்கும் திருநின்றவூர் இரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.அதனால் காலை 7.30 மணி முதல் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் விரைவு பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விரைவு ரயில் கடந்த ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.ஒரு மணி நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல் சரிசெய்யப் பட்டது. பின்னர் வழக்கம் போல் இரயில் இயக்கப்படுகிறது.ஒரு மணி நேரமாக சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்தனர்.