Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலை வெடி விபத்து- நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பட்டாசு ஆலை வெடி விபத்து- நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சத்தை உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசு – ஈபிஎஸ் கண்டனம்

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ