ஓசூர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள், அரியலூர் மாவட்டம், வெற்றியூரில் மீண்டும் ஒரு விபத்து உறைய வைத்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
மூன்று பெண்கள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றியூர் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றனர். அங்கு அனைவரும் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்று பேரும் முதல் நாள் வேலைக்கு சென்றதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
அப்போது, அங்கிருந்த மூலப்பொருட்கள் அடங்கிய பெட்டியைப் பிடித்து இழுத்த போது, உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக, விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் கூறுகின்றனர். மேலும், உரிய பாதுகாப்பு இன்றி, குப்பைப் போல் வெடி மருந்துகள் குவிக்க வைக்கப்பட்டிருந்ததும், இந்த கோர விபத்திற்கு காரணமாக, அமைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அனுமதிகள் பெற்று ஆலைகள் இயங்கினாலும், பட்டாசு ஆலைகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வுச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றன. பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பணிகளில் புதிதாக வருபவர்களை கண்காணிப்பதுடன், பயிற்சி அளிப்பதும் அவசியம் என்பதை வெற்றியூர் பட்டாசு ஆலை விபத்து உணர்த்துக்கிறது.