ஓசூர் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்க வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து சாதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் 100- க்கும் மேற்பட்ட நிரந்திர பட்டாசுக் கடைகள் இயங்கி வருகின்றன. இது மட்டுமின்றி தீபாவளி நேரங்களில் தற்காலிகமாக உரிமம் பெற்று 500- க்கும் மேற்பட்ட கடைகள் இயங்குவது வழக்கம்.
அந்த வகையில், அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இந்த கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசுக் கடைகளுக்கும் தீ பரவியதால், பட்டாசுகள் வெடித்துச் சிதறின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்த ஏழு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடின.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதால் இரு மாநிலங்களுக்கிடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது, மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அணி அபாரம்!
இதற்கிடையே, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாயும், கர்நாடகா அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.