Homeசெய்திகள்தமிழ்நாடு"பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

"பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
File Photo

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், மேலும் 4 பேர் கவலைக் கிடமான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன்.

“மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது, ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள், அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில், அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

“டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும், அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ