Homeசெய்திகள்தமிழ்நாடுநாட்டு பட்டாசு ஆலையில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

நாட்டு பட்டாசு ஆலையில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

-

 

நாட்டு பட்டாசு ஆலையில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!
Video Crop Image

அரியலூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

அரியலூர் மாவட்டம், விரகாலூரில் உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீபாவளி விற்பனைக்காக ஆலையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசு ரகங்கள் வெடித்து சிதறியுள்ளன.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இந்த வெடி விபத்தில், அங்கு வேலை செய்து வந்த 11 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர். ஆலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10- க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வுச் செய்தனர். அதைத் தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

இதனிடையே, பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

MUST READ