Homeசெய்திகள்தமிழ்நாடுசிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

-

- Advertisement -

 

சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
File Photo

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. டாஸ்மாக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே தம்மம்பதி கிராமத்தில் அமைச்சர் நண்பர் அரவிந்த் பண்ணை வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் நேற்று (மே 26) பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இன்று (மே 27) சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. குளித்தலையில் பிரேம்குமார் என்பவர் வீட்டில் 10- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை தொடர்கிறது.

“இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

வருமான வரித்துறை சோதனை பாதுகாப்பிற்காக, சுமார் 100 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் கரூரில் முகாமிட்டுள்ளனர். தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததால் நேற்று பாதியிலேயே சோதனை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ