சென்னை எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
கச்சா எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர், கொசஸ்தலை ஆற்றில் முகத்துவாரம் பகுதிகளை படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், “கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் வழங்க வேண்டும்.
மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!
பாதிக்கப்பட்ட மீனவர்களை வைத்து எண்ணெய் கழிவுகளை அகற்ற கூறுவது, மனிதாபிமான மற்ற செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். நிபுணர்களைக் கொண்டு கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்படவில்லை. உயிர்கொல்லி வேலை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.