Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்ன வெயிலுடா... காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!

என்ன வெயிலுடா… காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!

-

என்ன வெயிலுடா… காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!

கடலூரில் காற்று வாங்க சைக்கிலில் புறப்பட்ட நாயின் வீடியோ வைரலாகியுள்ளது.

dog

கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெப்பம் தனிந்து மாலை ஆறு மணிக்கு பிறகு கடலூர் மக்களுக்கு ஆறுதல் தருவது கடல் காற்று மட்டும் தான். மாலை ஆறு மணிக்கு பிறகு கடல் காற்று நகர் முழுவதும் வீசி வரும் நிலையில், மனிதர்கள் காற்று வாங்க வீடுகளை விட்டு வெளியே செல்கின்றனர்.

அதேபோல் கடலூர் புதுப்பாளையம் சாலையில், தனது சைக்கிளில் நாய் ஒன்றை அமர வைத்துக் கொண்டு ஒருவர் சைக்கிள் ஓட்டி காற்று வாங்க சென்றார். அவருடைய செல்ல நாய் மனிதர்களைப் போல் சாதுவாக சைக்கிள் பின்புறம் அமர்ந்து காற்று வாங்கிச் சென்று கொண்டிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

MUST READ