Homeசெய்திகள்தமிழ்நாடுவாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!

வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!

-

 

வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!

தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி, தஞ்சை எம்.பி. பழனி மாணிக்கம், தருமபுரி எம்.பி. செந்தில் குமார், சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு தி.மு.க.வில் இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் 2024- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குறிப்பாக, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்திற்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் இருந்து சுமார் 6 முறை மக்களவைக்கு சென்றவர் பழனி மாணிக்கம்.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்களில் 11 பேர் புதியவர்கள்; 3 பெண்கள், 2 முனைவர் பட்டம் பெற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், தி.மு.க. வேட்பாளர்களில் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், 6 வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ