அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி வரை நீட்டித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
“குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்”- முதலமைச்சருக்கு ஆளுநர் எச்சரிக்கை!
அப்போது, நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.