அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று (மார்ச் 21) காலை 09.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பண்ணை வீட்டில் இன்று (மார்ச் 21) காலை 09.00 மணிக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.