Homeசெய்திகள்தமிழ்நாடுசைக்கிள் சின்னம் கோரி ஜி.கே.வாசன் வழக்கு!

சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே.வாசன் வழக்கு!

-

- Advertisement -

 

மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பரதநாட்டிய கதையில் நடிக்கும் ஜெயம் ரவி……மோகன் ராஜாவின் அடுத்த பிளாக்பஸ்டர்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளனர். அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறிய கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, தங்களுக்கான சின்னத்தைக் கோரி மனு அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தை போட்டியிட ஏதுவாக, அந்த சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாதாசாகேப் பால்கே விருது வென்ற திரை பிரபலங்களின் பட்டியல் இதோ!

அந்த மனுவில், “சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று (பிப்.21) காலை 11.00 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கு தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ