‘மிக்ஜாம்’ புயல் கரையை நெருங்கும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.04) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. புயலால், பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மிக்ஜம் புயல்: துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.04) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களுக்கும் நாளை (டிச.04) அரசு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பால், குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.