Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!

-

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே வடகிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர்தொலைவிலும், தென்கிழக்கு புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ஃபெங்கல் புயல் தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழகம் – புதுவை கடற்கரையை நெருங்கி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே புயலாக நாளை மதியம் கரையை கடக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீச கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ