Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெஞ்சல் புயல் - வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!

ஃபெஞ்சல் புயல் – வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!

-

சென்னை வேளச்சேரியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, 2-வது குறுக்குத்தெருவில் சக்திவேல்(47) என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராத விதமாக அறுந்துவிழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி
சக்திவேல் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ரூ.5 இலட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்., இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ