‘மிக்ஜாம்’ பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.
கடைசியில் ‘தளபதி 68’ பட டைட்டில் இது தானா?….வெளியான புதிய தகவல்!
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்களின் ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
ரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்…. விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து…. லால் சலாம் அப்டேட்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு கொறடா முனைவர் கோவி.செழியன், 1 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அவரிடம் வழங்கினர். அதன்படி, அமைச்சர்களின் ஒருமாத ஊதியமான 35.70 லட்சம் ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான 91.34 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.