Homeசெய்திகள்தமிழ்நாடு"புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

“புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

-

 

"புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஃபைட் கிளப் …. டீசர் குறித்த அறிவிப்பு!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “மிக்ஜாம் புயலை எதிர்க்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. திருவள்ளூரில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதியில் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயாராக உள்ளனர். வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. மண்டல அலுவலர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் களத்திற்குச் செல்ல முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 162 சமுதாயக் கூடங்கள் தயாராக உள்ளன.

வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா… அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!

வடகிழக்கு பருவமழைப் பாதிப்பால் இதுவரை 420 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் தரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ