தமிழ்நாட்டில் மின்நுகர்வு விரைவில் 45 கோடி யூனிட்டுகளை எட்டக்கூடும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாட்டில் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் மின்நுகர்வு தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்டுகளாக இருந்து வந்தது. சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, வீடுகளில் ஏசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி மின்நுகர்வு 40 கோடி யூனிட்டுகளைத் தாண்டி இருக்கிறது.
கடந்த மார்ச் 29- ஆம் தேதி நிலவரப்படி, 42.64 கோடி யூனிட்களாக மின்நுகர்வு உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 01- ஆம் தேதி மின் நுகர்வு 43.01 கோடி யூனிட்களாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருவதுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி உள்பட இதர காரணங்களால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் பயன்பாடும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதன் காரணமாக, வரும் நாட்களில் 45 கோடி யூனிட்களாக மின்நுகர்வு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.