Homeசெய்திகள்தமிழ்நாடு"அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்"- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

"அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்"- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 27) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோடைக்காலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடியை ஏற்படுத்தும்; கோடைகாலத்தில் குடிநீர் தேவையைக் கருதி அனைத்துத் துறையினரும் இணைந்துச் செயல்பட வேண்டும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவுச் செய்ய வேண்டியுள்ளது. நீரேற்று நிலையங்கள் தடையின்றிச் செயல்பட மின்சாரம் தடையின்றிக் கிடைக்க வேண்டியது அவசியம்.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூபாய் 150 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ