Homeசெய்திகள்தமிழ்நாடு“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

-

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

NLC

பூவுலகின் நண்பர்கள் நேற்று முன்தினம்  “மின்சாரத்தின் இருண்ட முகம்” என்கிற ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வு தாமாக முன்வந்து(suo moto) இன்று வழக்காக விசாரித்தது.

விசாரணையில், இதுகுறித்து என்.எல்.சி நிர்வாகம், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

MUST READ