Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் வடிவேல் சுவாமி தரிசனம் 

திருவண்ணாமலை கோயிலில் நடிகர் வடிவேல் சுவாமி தரிசனம் 

-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிற்கு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி அண்ணாமலையார் கோவில் முன்பு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த தீபத் திருவிழாவில் முக்கிய நாளான வரும் 13-ஆம் தேதி அண்ணாமலையார் கோவில் அதிகாலையில் பரணி தீபமும், அன்று மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல், படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு வார காலமாக திருவண்ணாமலை வந்திருந்தார். இந்நிலையில் தீபத் திருவிழா வருவதை ஒட்டி இன்று நடிகர் வடிவேல் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் சார்பில்  நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் வடிவேலு உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

MUST READ