Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

-

கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 12 குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் உயிரிழந்த நபர்களுக்கு ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உடன் இருந்தனர்.

MUST READ