Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு

திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு

-

திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. காய்ச்சலுக்காக மருத்துவமனை வருவோருக்கு உரிய சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் தனி வார்டு பகுதியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொசுவலை கொடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க இங்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்த பயிற்சி மருத்துவர் சிந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவரின் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பா என்பது உறுதி செய்யப்படும்.

MUST READ