வரும் டிசம்பர் 16- ஆம் தேதி வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. மீட்புப் பணிக்கு முதலமைச்சரே நேரில் சென்ற நிலையில் எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கின்றனர். புயல் பாதிப்பு ஏற்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவர் சேலத்தில் இருந்தார்.
அமைச்சர்கள் தொடர்ந்து, மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு நிதி ஒதுக்குமாறு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அழுத்தம் கொடுக்கலாம். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், எந்த படமுமின்றி உடனுக்குடன் தரப்பட்டது. கடந்த 2015- ஆம் ஆண்டு புயலின் போது, அ.தி.மு.க. அரசு ரூபாய் 5,000 நிவாரணமாக அறிவித்தது; தி.மு.க. அரசோ ரூபாய் 6,000 வழங்குகிறது.
டிச.14- ல் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!
நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உரிய முறையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.