
வரும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் திரை வாழ்க்கை – ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.