Homeசெய்திகள்தமிழ்நாடுகாய்கறி விலையில் சரிவு - விவசாயிகள் வேதனை

காய்கறி விலையில் சரிவு – விவசாயிகள் வேதனை

-

காய்கறி விலையில் சரிவு – விவசாயிகள் வேதனை
 மலைப்பகுதியில் விளையும் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

காய்கறி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் வெள்ளை பூண்டு, முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மேல்மலைய் பகுதிகளான பூம்பாறை, அட்டுவம்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட கேரட் மற்றும் முட்டைக்கோஸ் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காய்கறி

 

அடிக்கடி காய்கறி விலையில் சரிவு ஏற்படுவதால் கொடைக்கானலில் ஒழுகுமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் மற்றும் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரட் கிலோ 12 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையும் முட்டைக்கோஸ் கிலோ 5 ரூபாய் வரையும் விற்பனையாகின்றன. ஒரு சில இடங்களில் முட்டைக்கோஸ் விலை போகாததால் விளைநிலத்திலேயே விடப்படக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

MUST READ