தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வரும் நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஏற்கனவே, முன்பதிவு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் மக்கள் வெளியூர் செல்ல நேரிடும் என்பதால், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!
அதன்படி, நவம்பர் 10, 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், நவம்பர் 11, 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.