சென்னையில் இருந்து நேற்று (நவ.09) ஒரே நாளில் மட்டும் 550 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 3,465 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து, தீபாவளியைக் கொண்டாட தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
லப்பர் பந்து படத்திலிருந்து முதல் பாடல் நாளை ரிலீஸ்
இரண்டாவது நாளான இன்று (நவ.10) 3,995 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஏற்கனவே அறிவித்தபடி, கோயம்பேடு உள்பட ஐந்து இடங்களில் இருந்து நேற்று (நவ.09) பேருந்துகள் இயக்கப்பட்டன.
எனினும், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கிடையே ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையியல் அணிவகுத்துச் சென்றனர்.
ரிபெல் படத்தின் முன்னோட்டம் அப்டேட்
அதேபோல், தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவித்தனர். ஜிஎஸ்டி சாலையில் சிறப்புப் பேருந்துகள் ஒருபக்கம், கடைகளுக்கு சென்ற மக்கள் ஒருபக்கம் என இப்படி இருக்க, மழையும் பெய்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதனால் வாகனங்கள் ஊர்ந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
எனினும், ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகர பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதால், வழக்கமான பண்டிகைக்கால நாட்களை விட போக்குவரத்து நெரிசல் குறைந்துக் காணப்பட்டது.