Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் குறித்து அவதூறு: சீமான் இல்லத்தை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்!

பெரியார் குறித்து அவதூறு: சீமான் இல்லத்தை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்!

-

- Advertisement -

தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பிரை போலிசார் கைது செய்தனர்.

அண்மையில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. மேலும், அவரது விமர்சனத்திற்கு ஆதாரம் கேட்டு பல்வேறு திராவிட இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனினும் அவர் வழங்கவிலலை.

இந்த நிலையில் பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீமான் இல்லத்தின் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று பேரணியாக சென்று சீமான் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, சீமானை கண்டித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் சீமானின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச்சென்றனர். முற்றுகை போராட்டம் காணமாக திருவான்மியூர் முதல் நீலாங்கரை வரையிலான சாலையில் போக்குவரத்து கடுமையா பாதிக்கப்பட்டது

MUST READ