Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்... தனியார் வானிலை ஆர்வலர்...

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கணிப்பு!

-

- Advertisement -

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதிப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,  டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நவம்பர் 26, 27ஆம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் மிக கனமழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் என்றும் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

MUST READ