Homeசெய்திகள்தமிழ்நாடுநீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோவில் இடித்து அகற்றம்... பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோவில் இடித்து அகற்றம்… பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

-

விழுப்புரம் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோவிலை போலிஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் இடித்து அகற்றினர்.

விழுப்புரம் மாவட்டம் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள ராகவன் வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்கு செல்லும் கிளை வாய்க்கால் கரையின் மீது கிராம மக்கள் மாதா கோவிலை கட்டி வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதா கோவிலை இடித்து அகற்றிவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும்  மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில், பருகம்பட்டு மாதா கோவிலை இடித்து அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது  கிராமத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பலத்த போலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மாதா கோவில் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டத.

MUST READ