Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை

ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை

-

- Advertisement -

டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்.

ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடலூரில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை  சந்தித்து கூறியதாவது; டெங்கு காய்ச்சலின் அதிகரிப்பால் பல்வேறு மாவட்டங்களில் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிபா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.அதில் கேரளாவில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இல்லாத குழந்தைகளுக்கு எளிய முறையில் பரவுவதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளும்படி கூறினார்.நிபா வைரஸ்க்கு மருந்துகள்,தடுப்பூசிகள் இல்லாத நிலையில் அதனை எதிர்க்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

MUST READ