டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வீடுகளில் ஏடிஎஸ் கொசுப் பரவுவதைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கிறார்களா என்பதை வீடு, வீடாகச் சென்று கண்காணிப்பது அவசியம்.
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
காலை, மாலை என இரு வேளைகளிலும் கொசு மருந்து தெளித்தல் மற்றும் இதர கொசு ஒழிப்புப் பணிகளில் மலேரியா தடுப்புப் பணியாளர்கள் ஈடுபட வேண்டும். வீட்டில் நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து கொசு உற்பத்தியைத் தடுக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்தி கொசு உற்பத்தி ஆகாத வண்ணம் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.