Homeசெய்திகள்தமிழ்நாடுபிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு - மதுரை நீதிமன்றம்

பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு – மதுரை நீதிமன்றம்

-

பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு – மதுரை நீதிமன்றம்
பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டில்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் கோரிய மனு மீது நீதிபதி சாரா மாறி கேள்வி எழுப்பினார்.

பிரசாந்த் குமார் உம்ராவ்

டெல்லியைச் சேர்ந்த பாஜக கட்சி பிரமுகரும் வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இவர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் இங்கு கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்திருந்தார். மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த வீடியோ குறித்து தூத்துக்குடி போலிஸ்சார் வழக்கு பதிந்து உள்ளனர். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், தனக்கு வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்ட் செய்துள்ளதாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை என்றும், தான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார். எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிடுகையில், அமைதியாக உள்ள தமிழகத்தில் திட்டமிட்டு இரு மாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சனையை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார்.

இது இவரின் முதல் ட்விட் கிடையாது. இதுபோன்று பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை ட்விட் செய்து உள்ளார். இவ்வாறு இவர் வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவானது. ஆனால் தமிழ்நாடு அரசு உடனடியாக வடமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க டீம் அமைக்கபட்டு அமைதி உருவாக்கட்டது. இதே போல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது ஆய்வு செய்தது.

தமிழகத்தின் முதலமைச்சர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.

பிரசாந்த் குமார் உம்ராவ்

மேலும் உதவி நம்பர் help line number அறிவிக்கப்பட்டது. அதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் பாதுகாப்பு கோரி பயந்து தொழிலாளர்கள் போன் செய்தனர். இவ்வாறு விரைந்து செயல்பட்டதால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரர் வழக்கறிஞரிடம் ,இவர் ஒரு வழக்கறிஞர் ஏன் இது போன்ற வீடியவை பர்வேட் செய்யினும். இதன் தீவிர தன்மை தெரியாதா..? என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

எவ்வளவு பிரச்சனை இதனால் ஏற்படுகிறது என தெரியாதா? அவர் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கட்டும். இது போன்ற பதிவால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் அச்சம் நிலவியது. உடனடியாக சொந்த மாநிலம் திரும்ப வேண்டும் என்று ரயில் நிலையங்களில் குவிந்தனர். ஒரு ரயில் பெட்டியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இதை நான் நேரிலே பார்த்தேன் என்றார் நீதிபதி. ஒரு பிரமுகர் சமூக பொருப்பு இல்லாமல் இதை டூவிட் செய்த்து ஏன்? அதற்கான காரணம் என்ன? அவருக்கு சமுக பொருப்பு இல்லையா? ஒவ்வொரு நபருக்கு சமூக பொருப்பு வேண்டும் என்று கூறி முன்ஜாமின் தர மறுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

MUST READ