முதலமைச்சர் மேற்கோள் காட்டிய பதிவு நீக்கம்- வெடித்த புது சர்ச்சை
கன்னியாகுமரியை சேர்ந்த பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக இந்திய ராணுவம் டிவிட்டரில் தெரிவித்திருந்தது. இப்பதிவை ட்விட்டரில் மேற்கொள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவு மேஜர் ஜெனரலாக பொறுப்பேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த டெலோஸ் ப்ளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெலோஸ் ப்ளோரா மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்ப முடியாத மைல்கல், பெண்களால் முன்னேறக்கூடும், நம் வண் தமிழ்நாடும் எந்நாடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராணுவம் தற்போது அந்த பதிவை நீக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மேற்கொள் காட்டிய Northern commend-ன் டிவிட்டர் பதிவு நீக்கம் குறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டல அதிகாரியிடம் பாதுகாப்புத்துறையின் சென்னை மண்டல பி.ஆர்.ஓ காரணம் கேட்டுள்ளார்.
தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்ணாக மேஜர் ஜெனரால் பதவி உயர்வு பெற்றவருக்கு முதல்வர் தெரிவித்த வாழ்த்து பதிவை நீக்கியது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.