Homeசெய்திகள்தமிழ்நாடுமேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்  திடீரென்று கவிழ்ந்ததால் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம் பட்டி கூட்ரோடு பகுதியில் சாலையோர 20 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு சுமார் 50 பெண்கள் சென்று கொண்டிருக்கும்போது கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு படுகாயம். ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

MUST READ