தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.
பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
புதிதாக அந்த பொறுப்புக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பணி மூப்பு வரிசையில் கிருஷ்ணன் இ.ஆ.ப., சக்சேனா இ.ஆ.ப., சிவதாஸ் மீனா இ.ஆ.ப., பிரபாகர் இ.ஆ.ப. ஆகிய நான்கு அதிகாரிகளில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளது. இதில், குறிப்பாக தொழில்துறைக் கூடுதல் செயலாளராக உள்ள கிருஷ்ணன் இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணனை தலைமைச் செயலாளராக நியமிக்கும் பட்சத்தில், அவர் அந்த பதவியில் சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்வார் என என்றும் கூறப்பட்டுள்ளது.
அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியின் திரில்லர்… இன்று வெளியாகும் முக்கிய அப்டேட்!
அதேபோல், பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. மற்றும் ஏ.கே.விஸ்வநாதன் இ.கா.ப., ஆபாஷ் குமார் இ.கா.ப., சீமா அகர்வால் இ.கா.ப. ஆகிய நான்கு மூத்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும், தமிழக காவல்துறை டி.ஜி.பி. பதவிக்கான பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் கூறுகின்றனர்.